ECONOMY

மகிழ்ச்சி, பன்முகத்தன்மையுடன் தைப்பூசத்தைக் கொண்டாடுவோம்- பிரதமர் வாழ்த்து

25 ஜனவரி 2024, 2:35 AM
மகிழ்ச்சி, பன்முகத்தன்மையுடன் தைப்பூசத்தைக் கொண்டாடுவோம்- பிரதமர் வாழ்த்து

கோலாலம்பூர், ஜன 25- இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும்

தைப்பூச விழா முன்னிட்டு அனைத்து இந்துக்களுக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ

அன்வார் இப்ராஹிம் தனது தைப்பூச வாழ்த்துகளைத் தெரிவித்துக

கொண்டுள்ளார்.

இந்த தைப்பூச விழா கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இம்முறை

சிறப்பான முறையிலும் குடும்ப உறுப்பினர்களுடனும் கொண்டாடப்படும்

எனத் தாம் எதிர்பார்ப்பதாக தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட

காணொளியுடன் கூடிய பதிவில் அவர் கூறினார்.

மலேசியா பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதோடு அவரவர்

உரிமைகளையும் மதிக்கிறது. ஆகவே இந்து சமயத்தைச் சேர்ந்த சக

நண்பர்கள் அமைதியான முறையில் இந்த விழாவைக் கொண்டாடுவார்கள்

என எதிர்பார்க்கிறேன்.

நேசத்திற்குரிய மலேசியாவில் வலுவான ஒரு அங்கமாக விளங்குவதற்கு

ஏதுவாக தங்கள் முயற்சிகளை அதிகப்படுத்தி, நற்பண்புகள் மற்றும்

மதிப்புக் கூறுகளை மேம்படுத்தி, மனிதாபிமான உணர்வுகளை வலுப்பெறச்

செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

நாடு அமைதியுடனும் வலுவான பன்முகத்தன்மையுடனும் தொடர்ந்து

விளங்குவதை உறுதி செய்ய அரசாங்கம் தொடர்ந்து பாடுபடும் என்றும்

அவர் தைப்பூச் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.