ஷா ஆலம், ஜன 24 - தனக்கு எதிரான நிந்தனை வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றும் கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமது சனுசி
முகமது நோரின் முயற்சிக்கு அரசுத் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்கிற்கான தேதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று அது கூறியது.
மேலும், இந்த வழக்கில் விண்ணப்பதாரர் கூறியது போல் கடினமான அல்லது சிக்கலான சட்ட அம்சங்கள் இல்லை என்று துணை அரசு வழக்கறிஞர் டத்தோ மாஸ்ரி முகமட் தாவுத் கூறினார்.
சட்டம் 15 (1948ஆம் ஆண்டு நிநதனைச் சட்டம்) போன்ற செஷன்ஸ் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட குற்றவியல் விசாரணைகளை நடத்தும் தகுதியும் அதிகாரமும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதிக்கு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்த விசாரணையை நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவது நீதியின் நலனுக்கு உகந்தது அல்ல என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் மந்திரி புசார் நியமனம் மற்றும் ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்தது தொடர்பான உரைகள் தொடர்பில் சனுசிக்கு எதிராக கொண்டு வரப்படாட இரண்டு நிந்தனைக் குற்றச்சாட்டுகளை மாற்றுவதற்கான விண்ணப்பத்தை எதிர்க்கும் பிரமாணப் பத்திரத்தில் மஸ்ரி இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5, பிப்ரவரி 8, பிப்ரவரி 9, பிப்ரவரி 13, பிப்ரவரி 15, பிப்ரவரி 16, பிப்ரவரி 19, பிப்ரவரி 22 மற்றும் பிப்ரவரி 23 மற்றும் மார்ச் 11, மார்ச் 15, மற்றும் மார்ச் 18 ஆகிய தேதிகளில் நடந்த செலாயாங் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நோர் ராஜ்யா மாட் ஜின் தேதி நிர்ணயித்திருந்தார்.
இதற்கிடையில், இன்று நடைபெற்ற வழக்கு மேலாண்மை நடவடிக்கைகயின் போது, தனக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளை உயர்நீதிமன்றத்




