ஷா ஆலம், ஜன 24: மலேசியா சபா பல்கலைக்கழகத்தில் உள்ள சிலாங்கூர் மாணவர் சங்கத்தின் நலனைக் கவனிக்க மாநில அரசு மொத்தம் RM100,000 வழங்கியது.
ஒரு சிறந்த தலைமுறையை உருவாக்குவதற்கான கல்வி நிகழ்ச்சி நிரலை வலியுறுத்துவதோடு, சிலாங்கூர் மாணவர்களின் நலனுக்காக தனது நிர்வாகம் எப்போதும் முன்னுரிமை அளித்து வருவதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.
"இந்த மாணவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு, அன்புக்குரிய நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் வெற்றியுடன் வீடு திரும்ப வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்" என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முகநூலில் தெரிவித்துள்ளார்.
கல்வி ஆட்சிக் குழு உறுப்பினராகவும் இருக்கும் அவர், மலேசியா சபா பல்கலைக்கழகத்தில் ஏறக்குறைய 200 சிலாங்கூர் மாணவர்களை சந்திக்க கித்தா சிலாங்கூர் திட்டத்தில் கலந்து கொண்டார்.
கோத்தா கினாபாலுவில் இடம்பெற்ற பணி பயணம் மற்றும் சந்திப்பில் அமீருடின் மாணவர்களின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார்.




