பூச்சோங், ஜன 24: குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கு (பி 40) 50 உணவு கூடைகளை நன்கொடையாக மைடின் முகமட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (மைடின்) இன்று வழங்கியது.
மைடின் பிரிஹாத்தின் திட்டத்தின் மூலம், RM100 மதிப்புள்ள உணவு கூடைகளை நன்கொடையாக வழங்குவது மக்களின் சுமையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என அதன் நிர்வாக இயக்குனர் அஹிம்மட் மைடின் கூறினார்.
"மைடின் மார்ட் என்ற அங்காடி மூலம் சுற்றியுள்ள மக்களுக்கு பொருட்களை நியாயமான விலையில் வழங்குவது மட்டுமல்லாமல், மைடின் பிரிஹாத்தின் திட்டத்தின் மூலம் இந்த நன்கொடை தேவைப் படுபவர்களின் சுமையைக் குறைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறினார்.
மைடின் மார்ட் தாமான் கின்றாரா கிளையை இன்று திறந்து வைத்த பின்னர் அவர் இதனை தெரிவித்தார்.
இதற்கிடையில், மைடின் பிரிஹாத்தின் உணவுக் கூடையைப் பெற்ற நோர் ரஷிடா ஷாஹாரி (37), கிடைத்த உதவிக்கு நன்றி தெரிவித்தார்.
மூன்று குழந்தைகளின் தாயான அவர் மைடின் மார்ட் தனது வீட்டின் அருகே திறக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைந்தார்.
"எங்கள் குடும்பத்தின் சுமையைக் குறைக்கும் மைடினின் அக்கறைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்று அவர் கூறினார். அவர் ஓர் இல்லத்தரசி ஆவார்.
மைடின் பிரிஹாத்தின் உணவு கூடை அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களைக் கொண்டுள்ளது என ஒற்றைத் தாயான (53) ஹலிமா லா தெரிவித்தார்.
"இந்த உணவு கூடையை வழங்கியதற்கு நன்றி மைடின் எனக் கூறினார்.
"மைடின் மார்ட் கிளையை இங்கு திறப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், என்னைப் போன்ற குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு இங்கு பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்கும்," என்று அவர் கூறினார்.




