கோலாலம்பூர், ஜன 24 - நாளை வரை திரங்கானு மற்றும் கிளந்தானில் உள்ள ஒன்பது பகுதிகளில் கடுமையான அளவிலான தொடர் மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதில் கிளந்தானில் தும்பாட், பாசிர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தானா மேரா, பாச்சோக், மாச்சாங், பாசிர் பூத்தே மற்றும் கோலா க்ராய் ஆகிய இடங்கள் அடங்கும்.
பகாங்கில் உள்ள குவாந்தான் என்ற இடத்திற்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதாக மெட்மலேசியா மேலும் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், கிளந்தானில் குவா மூசாங் மற்றும் பகாங்கில் உள்ள ஜெரண்டுட், பெக்கான் ஆகிய பகுதிகளுக்குத் தொடர் மழை எச்சரிக்கையை அந்நிறுவனம் விடுத்துள்ளது.
- பெர்னாமா




