NATIONAL

பத்து மலைத் தைப்பூசத்தில் பாதுகாப்புப் பணியில் 1,600 போலீஸ்காரர்கள்

24 ஜனவரி 2024, 8:43 AM
பத்து மலைத் தைப்பூசத்தில் பாதுகாப்புப் பணியில் 1,600 போலீஸ்காரர்கள்

கோலாலம்பூர், ஜன 24 - நாளை நடைபெறவிருக்கும் தைப்பூச விழாவின்

போது பத்து மலையில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் ஒன்று

கூடுவர் என எதிர்பார்க்கப்படுவதால் அங்கு பாதுகாப்பு மற்றும் பொது

ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு எட்டு மணி நேர அடிப்படையில் போலீசா

ரோந்துப் பணியில் ஈடுபடுவர்.

எட்டு மணி நேர ரோந்து நடவடிக்கை என்பது ஷிப்ட் நேர பணிக்கான

அடையாளமாகும் என்று சிலாங்கூர் மாநில துணைப் போலீஸ் தலைவர்

டத்தோ எஸ். சசிகலா தேவி கூறினார்.

பத்துமலைக்கு வரும் பக்தர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்

அதேவேளையில் தங்களிடமுள்ள விலையுயர்ந்த பொருள்களை

பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும். நாளைய தைப்பூச விழா

சீராகவும் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதுமின்றியும் நடைபெறும் என

எதிர்பார்க்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் பாதுகாப்பு

ஏற்பாடுகளைக் பார்வையிட்டு பொதுமக்களுடன் கலந்துரையாடியப்

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தைப்பூச விழா சீராக நடைபெறுவதை உறுதி செய்ய 1,600 போலீஸ்

அதிகாரிகளும் உறுப்பினர்களும் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று மாநில

போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறியிருந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.