NATIONAL

‘பாடு‘ தரவுத் தளத்தில் நேற்று வரை 16 லட்சம் பேர் பதிவு

24 ஜனவரி 2024, 8:41 AM
‘பாடு‘ தரவுத் தளத்தில் நேற்று வரை 16 லட்சம் பேர் பதிவு

கோலாலம்பூர், ஜன 24- நாட்டிலுள்ள 3 கோடியே 80 ஆயிரம் மக்கள்

தொகையில் 16 லட்சத்து 13ஆயிரத்து 454 பேர் ‘பாடு‘ எனப்படும் மத்திய

தரவுத் தளத்தில் நேற்று வரை பதிவு செய்துள்ளனர்.

இம்மாதம் 2ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த தரவுத் தளத்தில் சிலாங்கூர்

மாநிலத்தில் மிக அதிகமாக அதாவது 292,534 பேர் பதிவு செய்துள்ள

வேளையில் அதற்கு அடுத்த நிலையில் சரவா (201,399 பேர்), பேராக் (133,369

பேர்) மற்றும் சபா (124,375 பேர்) ஆகிய மாநிலங்கள் உள்ளன என்று அந்த

தரவுத் தளம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

இதனிடையே, அனைத்து அரசாங்க ஊழியர்களும் வரும் பிப்ரவரி 15ஆம்

தேதிக்குள் தங்களின் விபரங்களை அந்த தளத்தில் பதிவிட வேண்டும்

என்று மற்றொரு பேஸ்புக் பதிவில் ‘பாடு‘ தெரிவித்தது.

இந்த தரவுத் தளத்தை தொடக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பல்வேறு தரப்பினரின் தரவுகளைச் சேகரிப்பது, சேர்த்து வைப்பது மற்றும் மேலாண்மை செய்வது உள்ளிட்ட நோக்கங்களுக்காக இந்த ‘பாடு‘ தரவுத் தளம் உருவாக்கப்பட்டதாக கூறியிருந்தார்.

மக்களுக்கு மேலும் ஆக்ககரமான முறையில் சேவை வழங்குவதற்காக

இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பொது மக்கள் www.padu.gov.my என்ற அகப்பக்கம் வாயிலாக தங்களைப்

பற்றிய விபரங்களைப் பதிவிடலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.