ஷா ஆலம், ஜன 24: அலோர் காஜாவைச் சுற்றி ஆயுதம் ஏந்திய கொள்ளைச் செயல்களில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 6 பேரில் படிவம் ஒன்று பயிலும் மாணவர் ஒருவரும் அடங்குவார்.
கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் கெடாவின் சிம்பாங் அம்பாட் மற்றும் சிக் ஆகிய இடங்களில் 13 முதல் 27 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக அலோர் காஜா மாவட்டக் காவல்துறை தலைவர் கூறினார்.
மாணவர் உட்பட சந்தேக நபர்களில் மூவர் மீது குற்றவியல் சட்டத்தின் 394 வது பிரிவின் கீழ் அதே சட்டத்தின் பிரிவு 34 உடன் சேர்த்து இன்று அலோர் காஜா நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என கண்காணிப்பாளர் அர்ஷத் அபு கூறினார்.
"மேலும் மூன்று சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்," என்று அவர் கூறினார், அவர்கள் ஏழு வெளிநாட்டு விவசாயிகளுக்கு எதிரான கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படுகிறது, கடந்த டிசம்பரில் மூன்று வழக்குகள் பதிவாகியுள்ளன.
சந்தேக நபர்கள் விலை மதிப்புடைய பொருட்கள் மற்றும் பணத்துடன் தப்பிச் சென்றது மட்டுமன்றி, இரும்பு மற்றும் கத்தியால் பாதிக்கப்பட்டவரை சரமாரியாக வெட்டியும், தாக்கியும் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் கிட்டத்தட்ட RM9,000 ரொக்கத்தை கொள்ளையடித்து நான்கு கைப்பேசிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.




