NATIONAL

 சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது மரம் விழுந்தது 

24 ஜனவரி 2024, 2:01 AM
 சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது மரம் விழுந்தது 

ஷா ஆலம், ஜன 24: நேற்று மதியம் பலத்த மழையின் போது பத்து நீலம் 34, புக்கிட் திங்கி, கிள்ளானில் மரம் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மேல் விழுந்தது.

வாகனத்தை ஓட்டி சென்ற பெண்ணுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் காரிலிருந்து வெளியேறி விட்டார் என சிலாங்கூர் தீயணைப்பு மீட்பு நடவடிக்கை பிரிவு உதவி இயக்குனர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக மாலை 4.49 மணிக்குப் பொதுமக்களிடமிருந்து அழைப்பு வந்ததையடுத்து, போர்ட் கிள்ளான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஆறு அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

"பாதிக்கப்பட்டவரின் வாகனம் உட்பட அப்பகுதியை சுற்றியுள்ள சுமார் நான்கு வாகனங்கள் மீது மரம் விழுந்திருந்தது மற்றும் மரம் அகற்றும் பணி மாலை 6.22 மணி அளவில் முடிவுற்றது," என அவர் அறிக்கை ஒன்றில் அஹ்மட் முக்லிஸ் தெரிவித்தார்.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.