NATIONAL

நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

22 ஜனவரி 2024, 6:25 AM
நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

அலோர் ஸ்டார், ஜன. 22: நேற்று பூலாவ் பாயர் கடற்பகுதியில், உள்ளூர் உரிமம் பெற்ற நிறுவனத்தில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.

காஜாங், சிலாங்கூரைச் சேர்ந்த 43 வயதான அப்பெண், கோலா கெடா ஜெத்தியிலிருந்து சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என கோத்தா ஸ்டார் மாவட்டக் காவல் துறைத் தலைவர் ஏசிபி அஹ்மட் ஷுக்ரி மாட் அகிர் கூறினார்.

"நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நீரில் மூழ்கியதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் இறந்துவிட்டதாக லாங்கார் காவல் நிலையத்திற்கு மதியம் 2 மணியளவில் மருத்துவமனையிலிருந்து தகவல் கிடைத்தது.

"பாதிக்கப்பட்டவரின் உடல் மேல் நடவடிக்கைக்காக HSB தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப் படுத்தப்பட்டுள்ளது" என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.