ஷா ஆலம், ஜன 20- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான ஏஹ்சான் ரஹ்மா விற்பனை நாளை நான்கு இடங்களில் நடைபெறும்.
99 ஸ்பீட்மார்ட் 1414, ஜாலான் தெப்பி சுங்கை (பண்டார் பாரு கிள்ளான்), அம்பாங் மேவா பொது மண்டபம் (லெம்பா ஜெயா), உபுதியா பள்ளிவாசல் செக்சன் 9 (பத்து தீகா தொகுதி) மற்றும் சூராவ் அர் ரவுடா, சௌஜானா இம்பியன் (காஜாங் தொகுதி) ஆகிய இடங்களில் மலிவு விற்பனை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நான்கு இடங்களைத் தவிர, சௌஜானா உத்தாமா, சுங்கை பெசார் மற்றும் தஞ்சோங் காராங் ஆகிய இடங்களில் பி.கே பி.எஸ்.சுடன் இணைந்து செகி ப்ரெஷ் பேரங்காடி மலிவு விற்பனையை நடத்தவுள்ளது.
மலிவு விற்பனை உள்ளூர் மக்களுக்கு விரிவுபடுத்துவதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பி.கே.பி.எஸ். மற்றும் செகி ப்ரெஷ் பல்பொருள் அங்காடி இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த விற்பனை நடைபெறுகிறது.
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட்
முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00
வெள்ளிக்கும் கம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ
சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 13.00
வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
இந்த மலிவு விற்பனை திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு
கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் 2,850 இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு விற்பனையின் வாயிலாக இதுவரை ஐம்பது லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
இந்த விற்பனை இடங்கள் தொடர்பான விபரங்களை பி.கே.பி.எஸ். முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.








