NATIONAL

ஞாயிற்று கிழமை வரை பகாங், ஜோகூர் மற்றும் சரவாக் மாநிலங்களில் தொடர் மழை

19 ஜனவரி 2024, 8:48 AM
ஞாயிற்று கிழமை வரை பகாங், ஜோகூர் மற்றும் சரவாக் மாநிலங்களில் தொடர் மழை

கோலாலம்பூர், ஜன 19: ஞாயிற்றுக்கிழமை வரை பகாங், ஜோகூர் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் தொடர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகாங்கில் குவாந்தன், பெக்கான் மற்றும் ரொம்பின் ஆகிய இடங்களுக்கும், ஜோகூரில் குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு ஆகிய பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

"மேலும், சரவாக் மாநிலத்தில், குறிப்பாக கூச்சிங், செரியான், சமரஹான், ஸ்ரீ அமான், பெத்தோங், சரிகேய், சிபு (சிபு மற்றும் செலாங்காவ்), முக்கா மற்றும் பிந்துலு ஆகிய இடங்களில் இந்த ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என அந்நிறுவனம் தெரிவித்தது.

சமீபத்திய வானிலை பற்றிய தகவல்களை myCuaca கைபேசி செயலி மூலமாகவோ அல்லது MetMalaysia அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களை நாடுவதன் மூலமாகவோ காணலாம்.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.