ECONOMY

கெசுமா மடாணி  திட்டத்தின் வழி  தைப்பூச பக்தர்களுக்கு   சிறப்பு சேவை  மனித வளத்துறை அமைச்சர் ஸ்டிவன் சிம் சீ கியோங் தகவல்

19 ஜனவரி 2024, 7:25 AM
கெசுமா மடாணி  திட்டத்தின் வழி  தைப்பூச பக்தர்களுக்கு   சிறப்பு சேவை  மனித வளத்துறை அமைச்சர் ஸ்டிவன் சிம் சீ கியோங் தகவல்

செய்தி. சு. சுப்பையா

பத்துமலை.ஜன.19-  தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பத்துமலை முருகன் திருத்தலத்திக்கு 10 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள். இவர்களில் குறைந்தது 5 லட்சம் பேருக்கு மனித வளத்துறை அமைச்சின் கீழ் கெசுமா மடாணி என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு சேவை வழங்கப் பட வேண்டும்  என்று மனித வளத்துறை அமைச்சர் ஸ்டிவன் சிம் சீ கியோங் தெரிவித்தார்.

எதிர்வரும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு  மனித வளத்துறை அமைச்சர் ஸ்டிவன் சிம் பத்துமலை முருகன் கோவிலுக்கு  இன்று சிறப்பு வருகை மேற்கொண்டார் . கடந்த வாரத்தில் போக்கு வரத்து துறை அமைச்சர் அந்தோணி லொக் வருகை தந்தார் என்பதும் குறிப்பிட தக்கது.

காலை சரியாக 10.00 மணிக்கு  இங்கு வந்தடைந்த அமைச்சர் உடனே பத்துமலை கோவில் அடிவாரத்தில் இருக்கும் விநாயக பெருமான் கோவிலுக்கு அழைத்து செல்லப் பட்டு சிறப்பு அர்ச்சனை செய்யப் பட்டு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பிக்கப் பட்டார்.

அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். மனித வளத்துறை கீழ் கெசுமா மடாணி என்ற 200  பேர் கொண்ட தொண்டூழிய சேவையாளர்கள் தைப்பூசத்தன்று பக்தர்களுக்கு சிறப்பு சேவை வழங்குவர்.

பத்துமலைக்கு வரும் உடற்பேறு குறைந்தவர்கள், சிறார்கள், கர்ப்பணி பெண்கள் என அனைவருக்கும்  ஓய்வு எடுக்கும் தளத்தில்  மனித வளத்துறை அமைச்சின் கீழ் வழங்கப்படும் பயிற்சிகளுக்கான பதிவுகள் போன்ற சிறப்பு சேவை வழங்கப்படும்.

குடும்ப மாதர்களுக்கு வழங்கப்படும் காப்புறுதி திட்டத்திக்கான பதிவும் இங்கு வழங்கப் படும். பக்தர்களுக்கு இலவசமாக குடி நீரும் வழங்கப்படும்.

இதற்காக பத்துமலை நூழைவாசாலுக்கு அருகில் அமைக்கப் பட்ட மா பெரும் கூடாரத்தில் ஒரே நேரத்தில் குறைந்தது 500 பேர் பயனடையலாம். மனித வளத்துறை அமைச்சு முதன்முறையாக இந்த சிறப்பு சேவையை  பத்துமலை முருகன் கோவிலில்  செய்கிறது. பத்துமலை கோவிலுக்கு வரும் பொது மக்களை தேடி சென்று அரசு அதன் சேவைகளை வழங்கவுள்ளது.

இந்த சிறப்பு சேவையின் வழி மலேசியர் என்ற உணர்வை மேலோங்க செய்ய முடியும். தொண்டு சேவையில் ஈடு படும் தொண்டர்களுக்கு இது ஒரு சிறப்பு பயிற்சியாக அமையும்.

இத்திட்டத்தில் மித்ராவும் இணைந்து பயிற்சிகளுக்கான பதிவுகளை  இதன் வழி இந்திய சமுதாயத்திக்கு சிறப்பான சேவையை செய்ய முடியும் என்று அமைச்சர் ஸ்டிவன் சிம் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.