NATIONAL

 நாட்டின் பொருளாதாரம் முழுமையாக மீட்டு கொண்டு வராத வரை சம்பளம் பெற மாட்டேன் - பிரதமர்

19 ஜனவரி 2024, 4:59 AM
 நாட்டின் பொருளாதாரம் முழுமையாக மீட்டு கொண்டு வராத வரை சம்பளம் பெற மாட்டேன் - பிரதமர்

சைபர் ஜெயா, ஜன 19: நாட்டின் பொருளாதாரம் முழுமையாக மீண்டு வராத வரை 2022 நவம்பரில் இருந்து தான் வகிக்கும் பதவிக்கு சம்பளம் வாங்க மாட்டேன் என்ற பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது நிலைப்பாட்டை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்.

பிரதமரின் நிலைப்பாட்டை தொடர்ந்து  ஒவ்வொரு மாதமும் தங்கள் சம்பளத்தில் 20 சதவீதம் குறைக்க  அமைச்சர்கள் குழுவும் முடிவு எடுத்ததாக நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வார் கூறினார்.

2024 ஆம் ஆண்டுக்கான ஒற்றுமை அரசாங்க அமைச்சர்கள் கூட்டத்தில்  போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அன்வார், நாட்டின் பொருளாதாரம் மீண்டு வரும் வரை அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு தொடரும் என்றார்.

24 நவம்பர் 2022 அன்று பிரதமராக இருந்த தனது முதல் செய்தியாளர் சந்திப்பில், தனது பதவிக்குச் சம்பளம் வாங்கப் போவதில்லை என்றும், இது தனது தலைமையின் மீது மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான முதல் படி என்றும் பிரதமர் அறிவித்தார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.