NATIONAL

போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்திய மூன்று பேர் கைது

19 ஜனவரி 2024, 3:54 AM
போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்திய மூன்று பேர் கைது

கிள்ளான், ஜன 19: நேற்று அதிகாலை போர்ட் கிள்ளான், பூலாவ் இண்டாவைச் சுற்றியுள்ள பல இடங்களில் போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி வேலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் மூன்று பேர் அதிரடி நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர்.

போலியான அடையாள அட்டைகளை தயாரித்து தவறாக பயன்படுத்தும் வெளிநாட்டினரைக் கண்டறிவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று தேசிய பதிவுத்துறை (ஜேபிஎன்) அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

காலை 5 மணி வரை புத்ராஜெயா வின் குடிவரவுத் துறையுடன் ஊடகங்களும் இணைந்து கொண்ட இந்த நடவடிக்கையில் ஏழு இடங்களில் 12 வீடுகளை ஆய்வு செய்தது.

"கைது செய்யப்பட்ட அனைவரிடமும் அடையாள ஆவணங்கள் இல்லாததாலும், பாஜாவ் அசோசியேஷன் அட்டைகள் இருந்ததாலும், மேல் விசாரணைக்காக ஜேபிஎன் புத்ரா ஜெயாவிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்த மூன்று பேரும் வெல்டர்களாக வேலை செய்வதாகவும் அவர்களில் ஒருவர் பிலிப்பைன்ஸ் என்றும் மற்ற இருவரும் சபா வைச் சேர்ந்தவர்கள் என்றும் ஜேபிஎன் தெரிவித்தது.

"60 ஜேபிஎன் உறுப்பினர்கள் மற்றும் 23 குடிவரவுத் துறை புத்ராஜெயா உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்த நடவடிக்கையில் பல அடையாள அட்டைகள் மற்றும் கட்டுமான தொழில் மேம்பாட்டு வாரிய (CIDB) அட்டைகளின் நகல்களும் கிடைத்தது" என்று ஜேபிஎன் தெரிவித்துள்ளது.

சரியான அடையாள ஆவணங்களைக் கொண்ட ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதை உறுதி செய்யுமாறு முதலாளிகளுக்கு ஜேபிஎன் நினைவூட்டுகிறது.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.