செய்தி ; சு. சுப்பையா
சுங்கை பூலோ.ஜன.17- பத்துமலை முருகன் கோவில் வளாகம் மற்றும் அதன் உட்புற மேம்பாட்டு பணிகள் நிறைவு காணும் நிலையில் இருக்கிறது. சமீபத்தில் கிள்ளானை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் வலைத் தலங்களில் பத்துமலை சுற்று வட்டார பொது வசதிகள்'' சீர் குலைந்து கேட்பார் அற்ற நிலையில் இருக்கிறது'' என்ற செய்தி வலைத் தளங்களில் பரவியது.
செய்தி பரவிய அன்று இரவே சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமருடின் ஷாரி உடனடி அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். மறு நாளே குத்தகையாளர்களை நியமித்து சாலை ஓரங்களில் உள்ள கால்வாய்களை சுத்தம் செய்து அதனை முறையாக மூடும் வேலைகளை செய்தார். மேலும் பொது மக்கள் பிரச்னைகள் வந்த உடனே நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று மாநில அரசின் கட்டுப் பாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் கேட்டுக் கொண்டார்.
சமீபத்தில் செலயாங் நகராண்மை கழகத்திக்கும் பத்துமலை கோவில் நிர்வாகத்திக்குமிடையே நீதி மன்ற வழக்கு நடை பெற்றுக் கொண்டிருந்தது. இதனால் இரு தரப்பிக்குமிடையே பணிப் போர் நிலவியது.
மந்திரி புசாரின் அதிரடி நடவடிக்கையால் இரு தரப்பும் இன்று பத்துமலையில் தைப்பூசா தயார் நிலை குறித்து பேசி முடிவு செய்தனர்.
இந்த சந்திப்புக் கூட்டத்தில் செலயாங் நகராண்மை கழகம், கோம்பாக் மாவட்ட நில அலுவலகம், செலயாங் நகராண்மை கழக நடவடிக்கை மன்றம், மாவட்ட போலீஸ் படை, சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயிடு அவர்களின் பிரதிநிதிகள் பத்துமலை கோவில் நிர்வாகத்துடன் சிறப்பு சந்திப்பு கூட்டம் நடத்தினர்.
அனைத்து தரப்பினரும் தைப்பூசா விழாவிற்கு பத்துமலைத் திருத்தலம் தயாராகும் தீவிரப் பணியில் ஈடு பட்டனர்.
மேலும் தைப்பூசா திருவிழாவின் போது பொது மக்களுக்கு சிற்ப்பு சேவை வழங்கவும் தயாராகி விட்டனர் என்பதை சிலாங்கூர் தமிழ் இன்று பத்துமலை திருத்தலத்திக்கு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.








