கோலாலம்பூர், ஜன 18: எதிர்வரும் சனிக்கிழமை வரை பகாங் மற்றும் ஜொகூரில் தொடர் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
பகாங்கில் குவாந்தான், பெக்கான், ரொம்பின் மற்றும் ஜொகூரில் குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி, ஜொகூர் பாரு ஆகிய பகுதிகளில் தொடர் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மெட்மலேசியா அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
மேலும், நாளை வரை சரவாக்கில் கூச்சிங், செரியான், சமரஹான், ஸ்ரீ அமான், பெத்தோங், சரிகேய், சிபு மற்றும் முக்கா ஆகிய பகுதிகளிலும் எச்சரிக்கை அளவில் தொடர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– பெர்னாமா




