NATIONAL

ஆசிரியையின் காரை மோதி கைப்பையைப் பறித்துச் சென்ற ஆடவனுக்குப் போலீஸ் வலைவீச்சு

17 ஜனவரி 2024, 2:06 AM
ஆசிரியையின் காரை மோதி கைப்பையைப் பறித்துச் சென்ற ஆடவனுக்குப் போலீஸ் வலைவீச்சு

சண்டகான், ஜன 17- ஆசிரியை ஒருவர் ஓட்டிச் சென்ற காரின் பின்புறம்

மோதிய ஆடவன் ஒருவன் அவரின் கைப்பையை பறித்துச் சென்றான்.

இங்குள்ள ஜாலான் ஜம்பாத்தான் மேரா மற்றும் ஜாலான் உத்தாரா சாலை

சந்திப்பில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் நிகழ்ந்த இந்த

சம்பவத்தில் அந்த ஆசிரியைக்கு 2,000 வெள்ளி இழப்பு ஏற்பட்டது.

நாற்பதேழு வயதான அந்த ஆசிரியை ஓட்டிச் சென்ற காரை டோயோட்டா

கேம்ரி ரக கார் பின்புறம் மோதியது. இதனால் அந்த ஆசிரியைக்கும்

மோதிய காரின் ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த

ஆடவன் மரக்கட்டையைக் கொண்டு அவரைத் தாக்க முயன்றான்.

இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில் அவ்வாடவன்

அந்த ஆசிரியையின் கைப்பையைப் பறித்துக் கொண்டு காரில் ஏறி

அங்கிருந்து தப்பினான். இச்சம்பவம் தொடர்பில் அந்த ஆசிரியைச்

சண்டகான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் என சண்டகான்

மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் ஃபுவாட் அப்துல் மாலிக்

கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.