ECONOMY

சிலாங்கூர் மாநில அளவிலான  பொங்கல் விழா  கோலாகலமாக  பந்திங்கில் நடை பெற்றது

15 ஜனவரி 2024, 6:50 PM
சிலாங்கூர் மாநில அளவிலான  பொங்கல் விழா  கோலாகலமாக  பந்திங்கில் நடை பெற்றது

செய்தி சு.சுப்பையா

பந்திங்.ஜன.15- சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் கோலாகலமாக பந்திங், சுங்கை சீடு தோட்ட தமிழ் பள்ளிக்கு அருகில் நடைபெற்றது. இந்த பொங்கல் விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தொடக்கி வைத்தார்.

இந்த விழா பந்திங் சட்ட மன்ற தொகுதியில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இரவு 8.45 மணி அளவில் மந்திரி புசார் அமிருடின் ஷாரி பொங்கல் விழா நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். அவருக்கு கோல கல வரவேற்பு நல்கப் பட்டது. பல வண்ண வான வேடிக்கைகள் வெடிக்கப்பட்டது. வீர முனி சங்கிலி கருப்பன் உருமி மேள குழுவினர்  உருமி மேளம் வாசித்தனர். கோல லங்காட் சிலம்பக் கழக 30 மாணவர்கள் வீர சாகச கட்சிகளுடனும், பெண்கள் கோலாட்டத்துடன் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின்  ஷாரியை அழைத்து வந்தனர்.

கோலா லங்காட் பி.கே.ஆர் தலைவர் ஹரிதாஸ், பூச்சோங் பி.கே.ஆர் தலைவர் அன்பரசன், பாங்கி பி.கே.ஆர் தலைவர் பாலா, கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், நகராண்மை கழக உறுப்பினர்கள் பன்னீர், கமலநாதன், சுரேஸ் மற்ற மேலும் பலர் புடை சூழ கோலகலமாக மந்திரி புசாரை அழைத்து வந்தனர்.

காலை முதல் தமிழர் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. காலையில் சுங்கை சீடு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வளாகத்தில் 52 பானைகளுடன் பொங்கல் வைக்கும்  விழா தொடங்கியது.

பின்னர் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. கபடி, உரி அடித்தல், இசை நாட்காலி, சிலம்பம், கயிறு இழுத்தல், மாருவேட போட்டி என மாலை 5.00 மணி வரை நடை பெற்றன.

பந்திங் மற்றும் சுற்று வட்டார தமிழர்கள், தமிழ்ப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமை  ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து சிறப்பித்தனர்.

மாலை 8.00 மணி அளவில் பொங்கல் கலை நிகழ்ச்சி நடை பெற்றன. சிலாங்கூர் மாநில போலீஸ் படையின் தலைவர் டத்தோ சசிகலா தேவி,  கோல லங்காட் மாவட்ட அதிகாரி மற்றும் கோல லங்காட் நகராண்மை கழக அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

அனைவரும் இரவு உணவு வழங்கப் பட்டன. இட்லி, தோசை, இடியாப்பம், நாசி லெமாக், மீ கோரேங் என பல்வகை உணவுகள் அனைவருக்கும் பரிமாறப்பட்டன.

பகலில் போட்டி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட வெற்றியாளர்களுக்கு கலை நிகழ்ச்சியின் போது பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப் பட்டன.

இந்த பொங்கல் நிகழ்ச்சியில் வயது முதிர்ந்த 10 தாய்மார்களுக்கு பொன் ஆடை போர்த்தி சந்தன மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். நள்ளிரவு 12.00 மணி வரை கலை நிகழ்ச்சி நடை பெற்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலை நிகழ்ச்சியை உல்லாசமாக கண்டு களித்தனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.