ECONOMY

ஷா ஆலம் அரங்கத்தை இடிக்கும் பணியில்  வெடிபொருள் பயன்படுத்தப்படாது

15 ஜனவரி 2024, 12:00 PM
ஷா ஆலம் அரங்கத்தை இடிக்கும் பணியில்  வெடிபொருள் பயன்படுத்தப்படாது

ஷா ஆலம், ஜன.15- ஷா ஆலம் அரங்கம் வெடி பொருட்கள் மூலம்  அல்லாமல் மனித ஆற்றல் மூலம் இடிக்கப்படும் என்பதால் அதை முழுமையாக தரைமட்டம் ஆக்குவதற்கு சிறிது காலம் பிடிக்கும்.

சுற்றுப்புறங்களில் ஏற்படும் பாதிப்பு மற்றும் அந்த வளாகத்தில் தெனாகா நேஷனல் பெர்ஹாட் நிறுவனத்தின்  (டி.என்.பி.) துணை மின் நிலையம் இருப்பது ஆகிய இரண்டு முக்கிய காரணங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.    என்று  சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி கூறினார்.

அது உடனடியாக செய்யப்படுவதை நான் உறுதி செய்வேன் . ஆனால் எங்களால் வெடிகுண்டுகள் அல்லது வெடி பொருட்களைப் பயன்படுத்த முடியாது என்று அவர் இன்று மாநில செயலக கட்டிடத்தில் மாநில அரசு ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான சிறப்புரையை வழங்கியப்  பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

முதலாவதாக, சுற்றுப்புற  தாக்கமே இம் முடிவுக்கான  காரணமாகும். அதனால்தான்  அரங்க  இடிப்புப் பணிகளை மனித ஆற்றலைக் கொண்டு மேற்கொள்ள  வேண்டியுள்ளது. அதற்கு சிறிது நேரம் ஆகும்.

இரண்டாவதாக, செக்சன் 13 பகுதிக்கு  மின்சாரம் வழங்கும் தெனாகா நேஷனல் நிறுவனத்தின் துணை மின் நிலையம் தொடர்பான சிக்கலை நாங்கள் தீர்க்க வேண்டியுள்ளது என்றார் அவர்.

துணை மின்நிலையத்தை இடமாற்றம் செய்வதற்கான ஒப்புதலை ஷா ஆலம் மாநகர் மன்றம் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில்  தற்போது அதனைச் செயல்படுத்தும் பணி நடந்து வருகிறது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் அரசாங்கம் புதிய ஷா ஆலம் விளையாட்டு வளாகத்திற்கான  திட்ட அனுமதியை நவம்பர் 15ஆம் தேதி  சமர்ப்பித்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. 3 கோடியே 55 லட்சம் வெள்ளி மதிப்பிலான இந்த திட்டத்தில்  தற்போது உள்ள ஷா ஆலம் அரங்கை இடிக்கும்  செலவும் அடங்கியுள்ளது.

டிசம்பர் 24 அன்று, ஸ்டேடியத்தை இடிக்கும் செயல்முறைக்கு  எம்பிஎஸ்ஏ அனுமதி வழங்கியதாக அமிருதீன் கூறினார்.

76.08 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள KSSA திட்டம் 2026 ஆம் ஆண்டளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.