ECONOMY

டாக்டர் குணராஜ் ஏற்பாட்டில் செந்தோசா தொகுதி மக்களுக்கு பொங்கல் பொருள்கள் அன்பளிப்பு

15 ஜனவரி 2024, 6:34 AM
டாக்டர் குணராஜ் ஏற்பாட்டில் செந்தோசா தொகுதி மக்களுக்கு பொங்கல் பொருள்கள் அன்பளிப்பு

கிள்ளான், ஜன 15- இன்று தொடங்கி கொண்டாடப்படும் பொங்கல் திருநாளை முன்னிட்டு செந்தோசா தொகுதியிலுள்ள வசதி குறைந்த குடும்பங்களுக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் பொங்கல் பொருட்களை வழங்கினார்.

பொங்கலிடுவதற்கு தேவையான மண்பானை, பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களடங்கிய பொட்டலங்கள் தொகுதியின் ஜாலான் யூசுப் சஹாபுடின், ஜாலான் ஹலு பாலாங், பெர்டானா விலா, கம்போங் ஜாவா, மெனாரா மாஜூ, புக்கிட் திங்கி மற்றும் டேசாவான் ஆகிய ஏழு இடங்களில் நடத்தப்பட்ட சிறப்பு நிகழ்வுகளில் வழங்கப்பட்டன.

பொங்கல் திருநாளைக் கொண்டாடும் தொகுதி மக்களுக்கு தனது  வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு வாழ்வில் தொடர்ந்து சுபிடசமும் வளப்பமும் பெற இறைவனைப் பிரார்த்திப்பதாக டாக்டர் குணராஜ் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.