ECONOMY

ஞாயிற்றுகிழமை வரை பகாங், ஜோகூரில் மோசமான வானிலை கனமழை எச்சரிக்கை

12 ஜனவரி 2024, 8:00 AM
ஞாயிற்றுகிழமை வரை பகாங், ஜோகூரில் மோசமான வானிலை கனமழை எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜன. 12: இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பகாங் மற்றும் ஜோகூரில் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

பகாங்கில் உள்ள ரொம்பின் மாவட்டம் மற்றும் ஜோகூரில் உள்ள செகாமாட், குளுவாங், மெர்சிங் மற்றும் கோத்தா திங்கி ஆகிய இரண்டு பகுதிகளும் சம்பந்தப்பட்டிருப்பதாக மெட் மலேசியா இன்று காலை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பகாங்கில் உள்ள பெக்கான் மாவட்டம் மற்றும் ஜொகூரில் உள்ள தங்காக், மூவார், பத்து பகாட், பொந்தியான், கூலாய் மற்றும் ஜோகூர் பாரு மாவட்டங்கள் ஆகிய இடங்களை கொண்ட இரு மாநிலங்களிலும் ஒரே காலகட்டத்திற்கு தொடர் மழை பெய்யும் என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில், சரவாக்கில் கூச்சிங், செரியன், சமரஹான், ஸ்ரீ அமான், பெந்தோங், சரிகேய் மற்றும் முக்காஹ் போன்ற பல பகுதிகளை உள்ளடக்கிய தொடர் மழையின் எச்சரிக்கையும் இன்று வெளியிடப்பட்டது.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.