ALAM SEKITAR & CUACA

ஷா ஆலம் பண்டாராயா சனிக்கிழமை செக்சன் யு13 உள்ள லோட்டஸ் செத்தியா ஆலமில் நடமாடும் (மொபைல் கவுண்டர்) சேவை

12 ஜனவரி 2024, 7:46 AM
ஷா ஆலம் பண்டாராயா  சனிக்கிழமை செக்சன் யு13 உள்ள லோட்டஸ் செத்தியா  ஆலமில்  நடமாடும் (மொபைல் கவுண்டர்) சேவை

ஷா ஆலம், ஜனவரி 12:   ஷா ஆலம் பண்டாராயா மாநகர் மன்றம்(எம் பிஎஸ்ஏ) நாளை சனிக்கிழமை அன்று, செக்சன் யு13 உள்ள லோட்டஸ் செத்தியா ஆலம் வாகன நிறுத்துமிடத்தின் அருகில் நடமாடும் (மொபைல் கவுண்டர்) சேவையை செயல்படுத்துகிறது.

ஷா ஆலம் ஆன் வீல்ஸ் (SAOW) சேவையானது, காலை 11 மணி தொடங்கி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என அதன் கார்ப்பரேட் மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநர் முகமட் அசார் முகமது ஷெரீப் தெரிவித்தார்.

 

SAOW இல் வணிகம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு MBSA 50 வெகுமதி புள்ளிகளையும் வழங்குகிறது.

 

"பதிவு செய்த பிறகு இந்த 50 புள்ளி வெகுமதிகளும் தானாகவே MyMBSA கணக்கில் வழங்கப்படும்.

 

"ஷா ஆலம் இ-லோயல்டி திட்டத்தின் மூலம் பல்வேறு அற்புதமான பரிசுகளை பெற முடியும்" என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மொபைல் அலுவலகம் என்பது வாடிக்கையாளர்கள் வார இறுதி நாட்களில் கவுண்டருக்கு வராமல் எளிதாக கையாள்வதற்கு MBSA வழங்கிய ஒரு தளமாகும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.