ECONOMY

‘பாடு‘ தரவுத் தளத்தில் பொதுமக்கள் பதிவு செய்வதில் உதவ நடமாடும் முகப்பிடங்கள் திறப்பு

12 ஜனவரி 2024, 7:17 AM
‘பாடு‘ தரவுத் தளத்தில் பொதுமக்கள் பதிவு செய்வதில் உதவ நடமாடும் முகப்பிடங்கள் திறப்பு

ஷா ஆலம், ஜன 12- பாடு எனப்படும் முதன்மை தரவுத் தளத்தில் பொது மக்கள் பதிவு செய்வதை எளிதாக்கும் நோக்கில் கிள்ளான் மற்றும் கோல சிலாங்கூரில் நடமாடும் முகப்பிடங்களை மலேசிய புள்ளி விபரத்துறை திறக்கிறது.

பதினெட்டு வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கான இந்த தரவுத் திட்டத்தில் பதிவு செய்ய விரும்புவோர் கைபேசி, அடையாளக் கார்டு, குடும்ப உறுப்பினர்களின் அடையாளக் கார்டு, வங்கிக் கணக்கு தொடர்பான  ஆவணங்களை உடன் கொண்டு வர வேண்டும் என்று சிலாங்கூர் மாநில புள்ளிவிபரத் துறை கூறியது.

இந்த பதிவு நடவடிக்கையில் பங்கேற்று பயனடைய கிள்ளான் மற்றும் கோல சிலாங்கூர் வட்டார மக்கள் அழைக்கப்படுகின்றனர் என்று அது தெரிவித்தது.

பொது மக்கள் https://www.padu.gov.my/  என்ற அகப்பக்கம் வாயிலாகவும் இந்த பாடு தரவுத் தளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று அத்துறை தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டது.

கிள்ளானில் நடமாடும் முகப்பிடங்கள் செயல்படும் இடங்கள் வருமாறு-

டிஜிட்டல் பொருளாதார மையம் (பெடி) கோத்தா ராஜா, கிள்ளான்  2-14 ஜனவரி 2024   

டேவான்  தோக் மூடா, காப்பார் 12-14 ஜனவரி 2024            

மஸ்ஜிட் படாரியா கம்போங் பத்து 12, காப்பார். 13 ஜனவரி 2024 (மாலை 2-5 மணி)

பாலாய் எம்.பி.கே.கே. தெலுக் நிப்பா, பூலாவ் இண்டா 15-17 ஜனவரி 2024

ரந்தாவ் பாஞ்சாங் பெங்குளு அலுவலகம் 15-17 ஜனவரி 2024

கிள்ளான் மாவட்ட நில அலுவலகம் 15-31 ஜனவரி 2024

பாலாய் எம்.பி.கே.கே. பெரிகி நெனாஸ் பூலாவ் இண்டா 18-21 ஜனவரி 2024

புக்கிட் காப்பார் பொது மண்டபம் 22-24 ஜனவரி 2024

லோட்டஸ் புக்கிட் திங்கி 25-31 ஜனவரி 2024

 

கோல சிலாங்கூரில் திறக்கப்பட்ட நடமாடும் முகப்பிடங்கள் வருமாறு-

டிஜிட்டல் பொருளாதார மையம் பெல்டா புக்கிட் செராக்கா 14,16,19,20 ஜனவரி 2024

டிஜிட்டல் பொருளாதார மையம் கம்போங் பத்து 19, ஜெராம். 15,16,19,20 ஜனவரி 2024

டிஜிட்டல் பொருளாதார மையம் தாமான் சவுஜானா உத்தாமா 17-18 ஜனவரி 2024

 டிஜிட்டல் பொருளாதார மையம் பெக்கான் ஈஜோக் 17-18 ஜனவரி 2024

டிஜிட்டல் பொருளாதார மையம் தாமான் ஸ்ரீ சஹாயா 17-18 ஜனவரி 2024

டிஜிட்டல் பொருளாதார மையம் சுங்கை சீரே 19-20 ஜனவரி 2024

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.