NATIONAL

மலேசிய லீக்கின் பயன்பாட்டிற்காக மைதானத்தை மேம்படுத்த RM300,000 நன்கொடை - ஜொகூர் இளவரசர்

11 ஜனவரி 2024, 8:41 AM
மலேசிய லீக்கின் பயன்பாட்டிற்காக மைதானத்தை மேம்படுத்த RM300,000 நன்கொடை - ஜொகூர் இளவரசர்

கோலாலம்பூர், ஜன 11: மலேசிய லீக்கின் பயன்பாட்டிற்காக மைதானத்தை மேம்படுத்த இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் (KBS) மானியம் மூலம் RM300,000 நன்கொடையாக வழங்கிய ஜொகூர் இளவரசர் (TMJ) துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் அவருக்கு மலேசிய கால்பந்து லீக் (MFL) தனது நன்றியைத் தெரிவித்தது.

ஜொகூர் டாருல் தாசிம் கிளப் உரிமையாளரின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது காரணம் தேசிய கால்பந்து கிளப் மைதான பராமரிப்பு செலவுக்கான நிதி சிக்கல்களை சமாளிக்க அது உதவியது என மலேசிய கால்பந்து லீக் (MFL) தலைவர் டத்தோ அப்துல் கானி ஹாசன் கூறினார்.

"ஜொகூர் இளவரசர் காட்டும் அக்கறை நிச்சயமாக மலேசிய லீக்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக மலேசிய லீக் கிளப்கள் தரமான சிறந்த  மைதானங்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கு உதவும்ய" என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இதற்கிடையில், RM 500,000 மானியம் வழங்கியதற்காக இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹானா யூயோவுக்கு, அப்துல் கானி தனது நன்றியைத் தெரிவித்தார்.

அனைத்து கால்பந்து கிளப்புகளாலும் பெறப்பட்ட நன்கொடையானது, விளையாட்டின் தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மலேசிய லீக், கிளப் மற்றும் மாநிலத்தின் நற்பெயரை மேம்படுத்துவதற்கு மைதான வசதிகளைக் குறிப்பாக மைதானத்தை மேம்படுத்துவதை உறுதிசெய்ய, மாநில அரசாங்கத்துடன் ஒரு ஸ்மார்ட் கூட்டாண்மையை உருவாக்க முடியும் என்று அவர் நம்புகிறார்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.