பேங்காக், ஜன 11 - தாய்லாந்தில் விமானச் சேவையை அதிகரிப்பது மற்றும் பிராந்திய விமானப் போக்குவரத்து மையமாக அதன் நிலையை மேம்படுத்துதல் குறித்து விவாதிக்க தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் கேபிட்டல் ஏ பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான் ஸ்ரீ டோனி பெர்னாண்டஸைச் சந்தித்தார்.
பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிப்பதற்கு ஏதுவாக பெரிய மற்றும் இரண்டாம் நிலை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிற்கு வரும் மற்றும் வெளியில் செல்லும் விமானப் பயணங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என்று ஸ்ரேத்தா தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்தில் உள்ள விமான நிறுவனங்களுக்கான வெளிநாட்டு பங்குரிமை வரம்புகளைப் பற்றி விவாதிக்க டோனி பெர்னாண்டஸை ஸ்ரேத்தாவைச் சந்திப்பார் என்று உள்ளூர் ஊடகங்கள் முன்னதாகத் தெரிவித்திருந்தன.




