NATIONAL

முற்போக்கு ஊதியக் கொள்கை தன்னிச்சையாக அமல்படுத்தப்படாது- ரபிஸி உத்தரவாதம்

10 ஜனவரி 2024, 4:01 AM
முற்போக்கு ஊதியக் கொள்கை தன்னிச்சையாக அமல்படுத்தப்படாது- ரபிஸி உத்தரவாதம்

கோல சிலாங்கூர், ஜன 10 - முற்போக்கு சம்பளக் கொள்கை அமலாக்கத்தை

அரசாங்கம் தன்னிச்சையாக அனுமதிக்காது. மாறாக, முதலாளிகளின் நிதி

ஆற்றல் மற்றும் நாட்டின் நடப்பு பொருளாதார நிலை ஆகியவையும்

இவ்விவகாரத்தில் கருத்தில் கொள்ளப்படும் என்று பொருளாதார அமைச்சர்

ரபிஸி ரம்லி கூறினார்.

இந்த கொள்கையின் அமலாக்கம் தன்னாவர் அடிப்படையிலானது

என்பதோடு இதில் அரசாங்கத்தின் ஊக்குவிப்பும் அடங்கியுள்ளது என்று

என்று அவர் சொன்னார்.

குறைந்தபட்ச சம்பள உத்தரவு போல் இதனையும் நாம் தன்னிச்சையாக

அமல்படுத்த முடியாது. காரணம் நிறுவனம் மற்றும் முதலாளிகளின்

நிதியாற்றல் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலை

ஆகியவற்றையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

நாட்டிலுள்ள பெரும் எண்ணிக்கையிலான முதலாளிகள் குறு, சிறு மற்றும்

நடுத்தர தொழில்முனைவோராக உள்ளனர். 97 விழுக்காட்டு வர்த்தக

ஸ்தபானங்கள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவையாக உள்ளன என்று அவர்

சொன்னார்.

இந்த கொள்கையை நாம் கட்டயமாக்கினால் பல முதலாளிகள் தங்கள்

வர்த்தகத்தை கைவிட்டு விடுவார்கள். இதனால் பலருக்கு வேலை வாய்ப்பு

பறிபோகும். ஆகவே, இவ்விரண்டையும் நான் சமநிலைப்படுத்த வேண்டும

என்றார் அவர்

ஆகவேதான் இவ்விவகாரத்தில் நாங்கள் முதலாளிகளின் ஆற்றலை

கவனத்தில் கொள்வதோடு அரசாங்கத்தின் ஊக்குவிப்பும் இருப்பதை உறுதி

செய்கிறோம். தவிர, இந்த கொள்கையை தன்னார்வ அடிப்படையில்

அமல்படுத்தவும் முடிவு செய்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

இந்த கொள்கையின் அமலாக்கத்தில் தனியார் துறையின் வருமானம் மீது

தமது அமைச்சும் மனிதவள அமைச்சும் கவனம் செலுத்தும் வேளையில்

அரசு ஊழியர்களின் சம்பள விகிதம் மீதான ஆய்வு பிரதமர் டத்தோஸ்ரீ

அன்வார் இப்ராஹிம் தலைமையில் மேற்கொள்ளப்படுகிறது என்று அவர்

குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.