NATIONAL

தீ விபத்தில் 12 வயதுடைய மாற்றுத்திறனாளி (OKU) சிறுவன் உயிரிழப்பு

10 ஜனவரி 2024, 2:01 AM
தீ விபத்தில் 12 வயதுடைய மாற்றுத்திறனாளி (OKU) சிறுவன் உயிரிழப்பு

கூச்சிங், ஜன 10: லோரோங் லியு ஷான் பேங் 6C, கோத்தா செந்தோசாவில் உள்ள ஆறு கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 வயதுடைய மாற்றுத்திறனாளி (OKU) சிறுவன் உயிரிழந்தான்.

மாலை 3.30 மணியளவில் தீ விபத்து குறித்து தனக்கு அழைப்பு வந்ததாகச் சரவாக் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) உதவி இயக்குனரான ஹெண்டேரி அர்டிமான்ஸ்யா கூறினார்.

அதனைத் தொடர்ந்து, பத்து லிந்தாங், தபுவான் ஜெயா மற்றும் கோத்தா சமரஹான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலிருந்து (பிபிபி) 40 உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் இயந்திரங்களுடன் சம்பவம் இடத்துக்கு விரைந்தனர் என அவர் கூறினார்.

"எரிந்த கடையின் மாடி அறையில் மாற்றுத்திறனாளி (OKU) சிறுவன் இறந்து காணப்பட்டான்.

"தீ விபத்துக்கான உண்மையான காரணம் மற்றும் மொத்த இழப்பு இன்னும் விசாரணையில் உள்ளது," என்று அவர் தீ அணைக்கும் நடவடிக்கை முடிவுற்ற பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.