NATIONAL

'பாடு' தரவுத் தளத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு

9 ஜனவரி 2024, 8:15 AM
'பாடு' தரவுத் தளத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு

கோலாலம்பூர், ஜன 9 -  அரசாங்கத்தின் முதன்மை தரவுத் தளம் (பாடு)

தொடங்கப்பட்டு எட்டாவது நாளான இன்று காலை நிலவரப்படி 10 லட்சத்திற்கும் அதிகமானோர்  அதிகமானவர்கள் அதில் பதிவு செய்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை 18 வயதுக்குட்பட்டவர்களையும்  உள்ளடக்கியுள்ளதாகப் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்தார்.

இந்த 'பாடு' பதிவின் மூலம் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட  மானியங்களை அமல்படுத்துவதில் ஏற்படும் இழப்பின் அபாயத்தைக் குறைப்பதை உறுதிசெய்ய அனைத்து அரசு நிறுவனங்களும்  முன்வந்துள்ளன என அவர் குறிப்பிட்டார்.

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட உதவித் திட்டத்திற்கு  மாறுவதற்கான வேகத்தைத் தொடருங்கள்  என்று அவர் கூறினார். அதே சமயம், இத்திட்டத்தில் இன்னும் பதிவு செய்யாதவர்கள்  http://padu.gov.my எனும் அகப்பக்கம் வாயிலாக பதிவு செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

இலக்கவியல் ஞானம் குறைவாக உள்ளவர்கள் குறிப்பாகப், பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் அண்டை வீட்டார் இத்திட்டத்தில் பதிவு செய்ய உதவும்படி  வட்டார மக்களை  அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த பாடு பதிவு ஜனவரி 2 முதல் மார்ச் 31 வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும்.  இதன் மூலம் பொதுமக்கள் தங்களின் அடையாள அட்டை எண், வீட்டு எண் மற்றும் வசிக்கும் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களைப் புதுப்பிக்கவும் உறுதிப்படுத்தவும் முடியும்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.