டுங்குன், ஜன. 8: எஸ்பிஎம் மலாய் மொழி தொடர் தேர்வின் (யுபிபிஎம்) கண்காணிப்பாளராக இருக்கும் ஆசிரியர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். தேசிய இடைநிலைப் பள்ளி (எஸ்எம்கே) பாடாங் புளூட் செல்லும் வழியில் அவர் ஓட்டி வந்த நான்கு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் அவர் இறந்தார்.
இச்சம்பவம் கிலோமீட்டர் 73, ஜாலான் ஜெரங்காவ்-ஜபோர், டுங்குன் கரெக்சனல் சென்டர், புக்கிட் பிசிக்கு அருகில் காலை 8 மணியளவில் நிகழ்ந்ததாக அல் முக்தாஃபி நகர தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் பில்லா ஷா ஷரிபுடின் அலி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட அப்துல் ராசிட் முகமட் நோர் (48), தேசிய இடைநிலைப் பள்ளி பாடாங் புளூட்டிற்கு வாகனம் ஓட்டிச் சென்று கொண்டிருந்த போது, அவர் விபத்துக்குள்ளாகி, சாலையின் இடது புறம் உள்ள புதருக்குள் வீசப்பட்டதாக ஷரிபுடின் கூறினார்.
"தீயணைப்புத் துறையினர் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரை அகற்றுவதற்கு சுமார் 10 நிமிடங்கள் எடுத்தன," என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.
சம்பவ இடத்திலேயே பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டதாகவும், மேல் நடவடிக்கைக்காக சடலம் காவல்துறையிடம் ஒப்படைக்க பட்டதாகவும் ஷரிபுடின் கூறினார்.
- பெர்னாமா




