NATIONAL

சட்டவிரோதப் ப்ரீபெய்ட் கார்டு பதிவு மோசடி கும்பல் முறியடிப்பு

8 ஜனவரி 2024, 8:34 AM
சட்டவிரோதப் ப்ரீபெய்ட் கார்டு பதிவு மோசடி கும்பல் முறியடிப்பு

சிரம்பான், ஜன 8: மாவட்டத்தில் செயல்பட்டு வந்த சட்டவிரோதப் ப்ரீபெய்ட் கார்டு பதிவு மோசடி கும்பலை காவல்துறை கடந்த புதன்கிழமை கண்டுபிடித்தது மற்றும் அதன் தொடர்பாக இரண்டு வெளி நாட்டவர்களைக் கைது செய்தனர்.

மாவட்டம் முழுவதும் இரண்டு வெவ்வேறு இடங்களில், சிரம்பான் IPD வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய சோதனையில் 20 மற்றும் 40 வயதுடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப் பட்டதாகச் சிரம்பான் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி அரிஃபாயின் தரவே தெரிவித்தார்.

30 செட் மடிக்கணினிகள், 17 கைபேசிகள், 104 சிம் பாக்ஸ்கள் (மல்டி பிளெக்சர்/மோடம் பூல்), பென் டிரைவ்கள் (30), சிம் கார்டுகள் (7,315), இன்டர்நெட் மோடம்கள் (நான்கு) மற்றும் நெட்வொர்க் சுவிட்சுகள் (மூன்று) ஆகிய பொருள்கள் பறிமுதல் செய்யப் பட்டன," என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

வெளிநாட்டிலிருந்து வரும் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து மோசடியான ப்ரீபெய்ட் கார்டு பதிவு நடவடிக்கைகளில் இந்த சிண்டிகேட் ஈடுபட்டுள்ளது விசாரணையில் கண்டறியப் பட்டதாக அரிஃபாயின் கூறினார்.

"மோசடி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பிற சிண்டிகேட் உறுப்பினர்களுக்குப் இணையப் ப்ரீபெய்ட் கார்டுகளின் சப்ளையர்களாக இந்த குழு செயல்படுவதாகவும் சந்தேகிக்கப் படுகிறது. இருவரும் விசாரணைக்காக ஜனவரி 10 ஆம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்," என்று அவர் கூறினார்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டப் பிரிவு 420 மற்றும் 239 தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் கீழ் விசாரிக்கப்பட்டது என்றார்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.