NATIONAL

நாளை வரை பகாங் மற்றும் ஜொகூரில் தொடர் மழை

8 ஜனவரி 2024, 8:27 AM
நாளை வரை பகாங் மற்றும் ஜொகூரில் தொடர் மழை

கோலாலம்பூர், ஜன 8: நாளை வரை பகாங் மற்றும் ஜொகூரில் உள்ள பல மாவட்டங்களில் கடுமையான தொடர் மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) கணித்துள்ளது.

இன்று பிற்பகல் 1 மணிக்கு வெளியிடப்பட்ட மெட் மலேசியாவின் அறிக்கையின்படி, பெக்கான், ரொம்பின் (பகாங்) மற்றும் குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி, ஜொகூர் பாரு (ஜொகூர்) ஆகிய இடங்களில் தொடர் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

சரவாக்கில் உள்ள கூச்சிங், செரியன், சமரஹான், ஸ்ரீ அமான், பெதோங், சரிகேய் மற்றும் முக்கா ஆகிய இடங்களிலும் இதே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது வியாழன் முதல் வெள்ளி வரை நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மாநில, மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுக்கள் (JPBN) மற்றும் மாவட்டங்கள் (JPBD) விவேகமாக செயல்பட்டு, வரவிருக்கும் பேரிடர்களைக் குறிப்பாக வெள்ள ஆபத்துள்ள பகுதிகளில் அபாயத்தை எதிர்கொள்ள தயார் நிலைகளை மேம்படுத்துமாறு தேசியப் பேரிடர் மேலாண்மை முகாம் (NADMA) தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையம் (NDCC) கேட்டுக் கொண்டது..

ஒவ்வொரு தற்காலிகத் தங்கும் மையமும் (PPS) அடிப்படைத் தேவைகளுடன் இருப்பதையும், Scene Control Post (PKTK) போதுமான செயல்பாட்டுக் கருவிகளைக் கொண்டிருப்பதையும், அவை நல்ல நிலையில் இருப்பதையும் உறுதி செய்யுமாறு JPBN மற்றும் JPBD கேட்டுக் கொள்ளப்படுகிறது.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.