NATIONAL

பகடிவதையால் பள்ளியின் விடுதியில் இருந்து மாணவர் தப்பி ஓட்டம் - 35 நபர்களின் வாக்குமூலம் பதிவு

8 ஜனவரி 2024, 3:25 AM
பகடிவதையால் பள்ளியின் விடுதியில் இருந்து மாணவர் தப்பி ஓட்டம் - 35 நபர்களின் வாக்குமூலம் பதிவு

கோலாலம்பூர், ஜன 8: பகடிவதையால் பள்ளியின் விடுதியில் இருந்து மாணவர் ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் தொடர்பான விசாரணையை காவல்துறையினர் கிட்டத்தட்ட முடித்துவிட்டனர்.

இதுவரை பாதிக்கப்பட்ட மாணவர் உட்பட 35 நபர்களின் வாக்குமூலங்களை தனது தரப்பு பதிவு செய்துள்ளதாகக் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அல்லாவுடின் அப்துல் மஜிட் கூறினார்.

"இவ்வாரம் காவல்துறையினர் விசாரணை ஆவணங்களை துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கு முன்பு இன்னும் பல நபர்களின் உரையாடல்கள் பதிவு செய்யப்படும்" என்று அவர் கூறினார்.

டிசம்பர் 8 ஆம் தேதி பகடிவதை நடந்ததாக கூறப்படும் விடுதியிலிருந்து தப்பி ஓடிய ஆண் மாணவர் ஒருவர் தொடர்பான வழக்கு விசாரணை அறிக்கையை தனது தரப்பு திறந்ததாக டிசம்பர் 20 அன்று அல்லாவுடின் உறுதிப்படுத்தினார்.

14 வயது மாணவனின் தாயார் காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து, குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31 இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டது என்றார்.

இதற்கிடையில், டிச. 21 அன்று கோலாலம்பூர் கொந்திஜன் காவல்துறையின் தலைமையகத்தில் தனது மகனின் வாக்குமூலத்தைக் காவல்துறையினர் பதிவு செய்ததை அம்மாணவனின் தாய் உறுதிப்படுத்தினார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.