NATIONAL

அரசாங்கத் திட்டங்கள் தொடர்பில் மாதாந்திர அறிக்கை தாக்கல் செய்வீர்- பிரதமர் உத்தரவு

8 ஜனவரி 2024, 3:23 AM
அரசாங்கத் திட்டங்கள் தொடர்பில் மாதாந்திர அறிக்கை தாக்கல் செய்வீர்- பிரதமர் உத்தரவு

புத்ராஜெயா, ஜன 8 - அரசாங்கத் திட்டங்களின் அமலாக்கம் மற்றும்

அவற்றின் மேம்பாட்டில் அரசு ஊழியர்களின் பங்களிப்பு தொடர்பில்

மாதாந்திர அறிக்கையைத் தாக்கல் செய்யம்படி அமைச்சின் தலைமைச்

செயலாளர் மற்றும் துறைத் தலைவர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்

இப்ராஹிம் பணித்துள்ளார்.

அந்த அறிக்கையின் விபரங்களை தம்மிடம் தெரிவிப்பதற்கு முன்னர்

அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமது ஜூக்கி அலியிடம்

அதனை சமர்ப்பிக்க வேண்டும் நிதியமைச்சருமான அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் துறையின் இவ்வாண்டு ஜனவரி மாத த்திற்கான முதலாவது

ஒன்றுகூடும் நிகழ்வுக்கு தலைமையேற்று உரையாற்றிய போது அவர்

இதனைத் தெரிவித்தார்.

அமைச்சின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் துணைத் தலைவர்களை

நான் சந்திக்கும் போதெல்லாம் கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும்

திட்டங்களை அதிகரிப்பது குறித்துதான் பரிந்துரைக்கின்றனர். இதனை நாம்

செய்ய முடியும். ஆனால் நாம் அமல்படுத்தக்கூடிய புதிய செயல்முறைகள்

உள்ளன என்றார் அவர்.

நாம் என்ன செய்துள்ளோம் என்பதை விளக்கும் அறிக்கை நிச்சயம் இருக்க

வேண்டும். அந்த திட்ட அமலாக்கத்தில் உங்களின் பங்கு (அரசு

ஊழியர்கள்) என்ன என்பதை விவரிக்க வேண்டும். அந்த அறிக்கை

அமைச்சின் தலைமைச் செயலாளர் மற்றும் துறைத் தலைவர்கள்

வாயிலாக அரசாங்கத் தலைமைச் செயலாளரிடம் சமர்பிக்க வேண்டும்

என்பதோடு அது குறித்து எனக்கும் தெரிவிக்கப்பட வேண்டும் என அவர்

சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.