NATIONAL

பகாங் மற்றும் ஜொகூரில் தொடர் கனமழை எச்சரிக்கை

8 ஜனவரி 2024, 1:19 AM
பகாங் மற்றும் ஜொகூரில் தொடர் கனமழை எச்சரிக்கை

ஷா ஆலம், ஜன 8: நேற்று முதல் இன்று வரை ரொம்பின், பகாங்கில் ஆபத்தான அளவில் தொடர் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.

இன்று பெக்கான், பகாங் மற்றும் ஜொகூரில் (செகாமட், குளுவாங், மெர்சிங் மற்றும் கோத்தா திங்கி) ஆகிய பகுதிகளில் மோசமான அளவிலான தொடர் கனமழை பெய்யும் என்றும் அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், மாரான், குவாந்தன், பெரா (பகாங்) மற்றும் தங்காக், மூவார், பத்து பஹாட், பொன்தியான், குலாய், ஜொகூர் பாரு (ஜொகூர்) ஆகிய இடங்களிலும் எச்சரிக்கை மட்டத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.