ECONOMY

சிப்பாங்கில் கார் நிறுத்துமிட குற்றங்களுக்கு அபராதம் 10 வெள்ளியாக குறைப்பு

6 ஜனவரி 2024, 8:48 AM
சிப்பாங்கில் கார் நிறுத்துமிட குற்றங்களுக்கு  அபராதம் 10 வெள்ளியாக குறைப்பு

ஷா ஆலம், ஜன 6- வாகன நிறுத்துமிடக் குற்றங்களுக்கான அபராதத் தொகையை சிப்பாங் நகராண்மைக் கழகம் இம்மாதம் முழுவதும் 10.00 வெள்ளியாக குறைத்துள்ளது.

இக்குற்றங்கள் தொடர்பான சம்மன்களை சரிபார்ப்பது மற்றும் செலுத்துவது போன்ற பணிகளை ஃப்ளெக்ஸி பார்க்கின் செயலி அல்லது சிப்பாங் நகராண்மைக் கழக முகப்பிடங்களில் மேற்கொள்ளலாம் என்று நகராண்மைக் கழகம் கூறியது.

2007ஆம் ஆண்டு சிப்பாங் நகராண்மைக் கழக சாலை போக்குவரத்து விதிமுறைகளின் கீழ் ஜனவரி 1 முதல் 31 வரை கார் நிறுத்துமிடக் குற்றங்களுக்கான அபராதத் தொகை குறைப்பு இயக்கம் மேற்கொள்ளப் படுகிறது என நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.

இந்த சலுகை தொடர்பான மேல் விபரங்களுக்கு 03-831902200, 03-83190300 என்ற எண்களில் அல்லது 03-83190230 என்ற ஹாட்லைன் எண்களில் நகராண்மைக் கழகத்தின் சட்டப் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம்.

பொது மக்கள் அபராதத் தொகையை எளிதான முறையில் செலுத்துவதற்கு ஏதுவாக இம்மாதம் முழுவதும் 34 இடங்களில் சிறப்பு முகப்பிடச் சேவையை நகராண்மைக் கழகம் வழங்குகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.