NATIONAL

அரிசி, நெல் விதை விலையை நிர்ணயிப்பதில் கார்டெல், மாஃபியா கும்பலின் ஆதிக்கமா? விவசாய அமைச்சு மறுப்பு

5 ஜனவரி 2024, 3:44 AM
அரிசி, நெல் விதை விலையை நிர்ணயிப்பதில் கார்டெல், மாஃபியா கும்பலின் ஆதிக்கமா? விவசாய அமைச்சு மறுப்பு

கோலாலம்பூர், ஜன 5 - நாடு முழுவதும் அரிசி மற்றும் நெல் விதைகளின்

விலையை நிர்ணயிப்பதில் கார்டெல் எனப்படும் சந்தை ஆதிக்கத்

தரப்பினர் அல்லது மாஃபியா கும்பலின் ஈடுபாடு உள்ளதாகக் கூறப்படுவதை

விவசாய மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.

மலேசியாவில் அரிசி தொழில் துறை 1994ஆம் ஆண்டு அரிசி

கட்டுப்பாட்டுச சட்டம் (சட்டம் 522) வாயிலாக அரசி, நெல்

விலைக்காட்டுப்பாட்டு ஒழுங்குமுறை அமைப்பினால் (கே.பி.பி.)

முறைப்படுத்தப்படுகிறது என்று அது கூறியது.

அரிசில் தொழில்துறை ஆரோக்கியமான மற்றும் சீரான முறையில்

மேம்பாடு காண்பதை உறுதி செய்ய லைசென்ஸ் மற்றும் அமலாக்க

நடவடிக்கைகள் வாயிலாக அமைச்சு ஒழுங்கு முறை நடவடிக்கைகளை

மேற்கொள்ள இந்த சட்ட விதி வகை செய்கிறது என்று அமைச்சு

அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

அரிசி மற்றும் நெல் தொடர்பான உற்பத்தி, மொத்த மற்றும் சில்லறை

வியாபாரம், இறக்குமதி அல்லது ஏற்றுமதி, மாநிலங்களுக்கிடையிலான

விநியோகம் உள்ளிட்ட பரிவர்த்தனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு

கே.பி.பி. தலைமை இயக்குநர் லைசென்ஸ் மற்றும் பெர்மிட் வழங்க இந்த

சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அரிசியின் மொத்த விற்பனை, சில்லறை விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி,

நெல் ஆலை, நெல் கொள்முதல், சான்றளிக்கப்பட்ட நெல் விதைகளை

விற்பனை செய்வதற்கான சிறப்பு அனுமதி உள்பட பல்வேறு

நடவடிக்கைகளுக்கு 39,000 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டதானது இந்த

தொழில்துறையில் கார்டெல் அல்லது மாஃபியா கும்பலின் ஆதிக்கத்தை

தெளிவாக புலப்படுத்துவதாக உள்ளது என என அமைச்சு குறிப்பிட்டது.

கடந்த 2023ஆம் ஆண்டில் நெல் விவசாயிகளின் தேவையை ஈடு செய்ய

72,000 மெட்ரிக் டன் சான்றளிக்கப்பட்ட நெல் விதைகளை வழங்க விவசாய

அமைச்சு அனுமதி வழங்கியது என்றும் அது கூறியது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.