NATIONAL

தைப்பூசம்- இந்து அரசு சாரா அமைப்புகளுடன் குணராஜ் சந்திப்பு

4 ஜனவரி 2024, 7:45 AM
தைப்பூசம்- இந்து அரசு சாரா அமைப்புகளுடன் குணராஜ் சந்திப்பு

கிள்ளான் ஜன 4 - தைப்பூச விழா முறையாகவும் சமய நெறிகளுக்கேற்பவும்  நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில்  இந்து சமயம் சார்ந்த அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் சந்திப்பு நடத்தினார்.

இந்த தைப்பூச பணிக்குழுவினர் தைப்பூச விழா சிறப்பான முறையிலும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் பணியில் ஈடுபடுவர்.

இந்த விளக்கக் கூட்டத்தில் அரசு சார்பற்ற அமைப்புகள், மலேசிய இந்து தர்ம மாமன்றம் மற்றும் மலேசிய  இந்து சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

ஜனவரி 25 ஆம் தேதி கொண்டாடப்படும் தைப்பூச திருவிழாவில் "தர்ம வேல்" திட்டத்தின் கீழ் இலவசப் பூஜைகள் மற்றும் பால்குடம் எடுத்தல் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படும் என குணராஜ் கூறினார்.

இதுபோன்று நிகழ்வுகளுக்கு கூடுதல் கட்டணம் செலுத்தப்படுவது தவிர்க்க இந்த தர்ம வேல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். தைப்பூச கொண்டாட்டத்தின் போது பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விரையமாவதைத் தவிர்க்க இந்த பணிக்குழு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றார் அவர்.

தைப்பூச கொண்டாட்டத்தின் போது கோயில் வளாகங்களில் மதுபானம் அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் போன்ற செயல்கள் முற்றாகத் தடை செய்யப்படும். இதுபோன்ற நடவடிக்கைகளை இந்தப் பணி குழு கண்காணிக்கும் என அவர் சொன்னார்.

தைப்பூச கொண்டாட்டத்தின் போது பினாங்கு, ஜொகூர், ஈப்போ,சித்தியாவான், பத்துமலை, கோலா சிலாங்கூர் மற்றும் சபாக் பெர்ணாம் ஆகிய பகுதிகளிலும் இந்த பணிக்குழு செயல்படும் என அவர் சொன்னார்.

எதிர்வரும் தைப்பூசம் கொண்டாட்டம் நாடு தழுவிய நிலையில் அமைதியாக மற்றும் சமூகமாக நடைபெறுவதை இந்த பணிக்குழு உறுதி செய்யும் என குணராஜ் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.