NATIONAL

புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பிறகு 3.06 டன் குப்பைகள் சேகரிப்பு

3 ஜனவரி 2024, 8:49 AM
புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பிறகு 3.06 டன் குப்பைகள் சேகரிப்பு

ஷா ஆலம், ஜன 3: கடந்த திங்கட்கிழமை 2024 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பிறகு கோலாலம்பூரைச் சுற்றி மொத்தம் 3.06 டன் குப்பைகள் சேகரிக்கப் பட்டதாக ஆலம் புளோராவின் செயல் பாட்டுப் பகுதியின் (வடக்கு) மேலாளர் தெரிவித்தார்.

சமூகம் தங்கள் வாழ்க்கை முறையைத் தூய்மையானதாக மாற்றுமாறு அறிவுறுத்திய அனுவார் முகமதட் ஷா, கடந்த ஆண்டு இதே கொண்டாட்டத்தின் போது 2.98 டன் குப்பைகள் சேகரிகரிப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.

அந்நிறுவனம் கடந்த ஆண்டு தலை நகரம் முழுவதும் மொத்தம் 700,000 டன் குப்பைகளை சேகரித்துள்ளது. இது 2022 உடன் ஒப்பிடும்போது நான்கு சதவீதம் அதிகமாகும்.

"இந்த அளவு ஒரு நாளைக்கு 1,900 முதல் 2,000 டன் குப்பைக்கு சமம்," என்று அவர் அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.

"பொதுமக்கள் நிறுவனத்தை மட்டும் முழுமையாக நம்பக்கூடாது, மாறாகப் பொதுவான தூய்மைக்காக அவர்கள் தங்கள் சொந்த முயற்சியைக் கடைப்பிடிக்க வேண்டும்." என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.