ஷா ஆலம், ஜன 3: நீர் சேவைத் துறையின் டிஜிட்டல் மயமாக்கலின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் முயற்சியில், பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் எஸ்டிஎன் பிஎச்டி (சிலாங்கூர் ஆயர்) முதல் முறையாக டாதா மற்றும் டிஜிட்டல் ஹேக்கத்தான் 2024ஐ ஏற்பாடு செய்துள்ளது.
இப்போட்டி தனிநபர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் திறந்திருக்கும். முதல் இடத்துக்கு RM10,000 ரொக்கப் பரிசும்,, அதைத் தொடர்ந்து RM5,000 இரண்டாம் மற்றும் RM3,000 மூன்றாவது இடங்களுக்கு வழங்கப்படும்.
"ஆயர் சிலாங்கூர் டாதா மற்றும் டிஜிட்டல் ஹேக்கத்தான் 2024 என்பது தொழில்நுட்ப ஆர்வலர்கள் நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், அறிவியல் தரவு செயலிகளைப் பயன்படுத்தி சிக்கலான பெரிய தரவுத் தொகுப்புகளைத் தீர்க்கவும் ஒரு தளமாக இருக்கும்.
"நீங்கள் புதியவராக இருந்தாலும் அல்லது இந்தத் துறையில் நிபுணராக இருந்தாலும், தரவு அறிவியல் தொழில்நுட்பத் துறையில் உங்களுக்கு அறிவு மற்றும் சிக்கல்களைத் தீர்க்கும் திறன் இருந்தால், நீங்கள் இப்போட்டியில் பங்கேற்க அழைக்கப் படுகிறீர்கள்" என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.
இப்போட்டி ஆயர் சிலாங்கூர் ஊழியர்களுக்கும் திறந்திருக்கும், வெற்றியாளருக்கு ரொக்கமாக RM2,000 வழங்கப்படும்.
மேலும் ஏதேனும் தகவலுக்கும் அல்லது பதிவுக்கு https://digital.airselangor.




