ஷா ஆலம், ஜன 3: இரண்டு மணி நேரத்திற்கான 67 கார் பார்க்கிங் இடங்களை ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) ஏற்பாடு செய்துள்ளது.
அப்பகுதிகள் செக்ஷன் 9, ஜாலான் தெங்கு அம்புவான் ஷாபேடா D 9/D, செக்ஷன் 15, ஜாலான் பஹாட் F 15/F மற்றும் செக்ஷன் 25, ஜாலான் செப்பாடு B 25/B ஆகியவை ஆகும் என்று மாநகர் மன்றம் தெரிவித்தது.
மேலும், அதில் செக்ஷன் 31, அங்கெரிக் வெண்ணிலா N 31/N மற்றும் செக்ஷன் U13, ஜாலான் ப்ரிமா R U13/R மற்றும் ஜாலான் ப்ரிமா F U13/F இல் ஆகிய இடங்களும் அடங்கும்
பார்க்கிங் இடத்திற்கான கட்டண விகிதம் ஒரு மணி நேரத்திற்கு RM1.20 ஆகும் (அதிகபட்சம் இரண்டு மணிநேரம்). அதே நேரத்தில் பயன்படுத்தும் நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை (திங்கள் முதல் வெள்ளி வரை) எனத் தெரிவிக்கப்பட்டது.
பயனர்கள் ஸ்மாட் சிலாங்கூர் பார்க்கிங், ஃப்ளெக்ஸி பார்க்கிங், கோபே, ஜோம் பார்க்கிங், டச் என் கோ இ-வாலேட் மற்றும் செட்டல் செயலிகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.
பார்க்கிங் இடத்தை தவறாகப் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக மேல்முறையீடு அல்லது அபராதக் குறைப்பு எதுவும் வழங்கப்படாது என்று எம்பிஎஸ்ஏ வலியுறுத்தியது.




