NATIONAL

கிளந்தான், பகாங்கில் வெள்ள நிலைமையில் மாற்றமில்லை- நட்மா

3 ஜனவரி 2024, 8:14 AM
கிளந்தான், பகாங்கில் வெள்ள நிலைமையில் மாற்றமில்லை- நட்மா

கோலாலம்பூர், ஜன 3 - கிளந்தான் மற்றும் பகாங்கில் வெள்ளத்தால்

பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை.

நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை 6.00 மணி வரை அவ்விரு

மாநிலங்களிலும் 13 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர் துயர் துடைப்பு

மையங்களில் இன்னும் தங்கியுள்ளனர்.

கிளந்தான் மாநிலத்தின் பாசீர் மாஸில் உள்ள ஒரு துயர் துடைப்பு

மையத்தில் எழு குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் தங்கியுள்ளதாக தேசிய

பேரிடர் நிறுவனத்தின (நட்மா) பேரிடர் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட

சமீபத்திய அறிக்கை கூறியது.

பகாங் மாநிலத்தின் மாரானில் உள்ள ஒரு நிவாரண மையத்தில் மூன்று

குடும்பங்களைச் சேர்ந்த 12 பேரும் தெமர்லோ மாவட்டத்திலுள்ள ஒரு

துயர் துடைப்பு மையத்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த பத்து பேரும்

தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தது.

இதனிடையே, ஜொகூர் மாநிலத்தின் சுங்கை பூலாய், கிளந்தான், தானா

மேரா, சுங்கை கோலோக் மற்றும் பெர்லிசில் உள்ள சுங்கை ஆராவ்

ஆகியவற்றில் நீர் மட்டம் எச்சரிக்கை அளவில் உள்ளதை வடிகால்

மற்றும் நீர் பாசனத் துறையின் டெலிமெட்ரி நிலையம் கண்டறிந்துள்ளது.

வெள்ளம் காரணமாகப் பாலம் உடைந்தது, நிலச்சரிவு, சாலைகளில் நீர்

பெருக்கு போன்ற காரணங்களால் டுங்குன், ஜாலான் டுரியான்

மெந்தாங்காவ், கிளந்தான் மாநிலத்திலுள்ள ஜாலான் சுங்கை சாம்

ஆகியவை போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.