NATIONAL

கணவன்- மனைவி  வீட்டில் இறந்த நிலையில் கண்டுபிடிப்பு- சிரம்பானில் சம்பவம்

3 ஜனவரி 2024, 3:33 AM
கணவன்- மனைவி  வீட்டில் இறந்த நிலையில் கண்டுபிடிப்பு- சிரம்பானில் சம்பவம்

சிரம்பான், ஜன 3 - இங்குள்ள ஜாலான் கெலிலிங் ஆடம்பரக் குடியிருப்பில்

கணவன், மனைவி இருவரும் இறந்த நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று பிற்பகல்  12.49 மணிக்குத் தங்களுக்குத்  தகவல் கிடைத்ததாகச்  சிரம்பான் மாவட்ட போலீஸ்  தலைவர் ஏசிபி அரிஃபாய் தாராவே தெரிவித்தார்.

உயிரிழந்த  34 வயது ஆடவர் போர்ட்டிக்சனில் உள்ள அனைத்துலகப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரியும்  வெளிநாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்,  உள்நாட்டவரான  31 வயது மனைவி லிங்கியில் உள்ள பல் கிளினிக்கில் மருத்துவராகப் பணி புரிந்து வந்துள்ளார் என்றார்.

சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குற்றவியல் கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்பதால் இச்சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

அத்தம்பதியின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக இங்குள்ள துவாங்கு ஜாபர் மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டன என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

தகவல் தெரிந்தவர்கள் புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் எடி குசைனி ஷரிபுடினை 012-770 7282 என்ற எண்ணில் அல்லது சிரம்பான் மாவட்ட தலைமையகம் 06-6033 222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.