சிரம்பான், ஜன 2: கடந்த டிசம்பரில் ஜெம்போலில் திருமண விழாவுக்கு (கேட்டரிங்) உணவு வழங்குவதில் மோசடி செய்தவரை விசாரிக்க உள்ளூர் பெண்ணை போலீஸ் தேடி வருகிறது.
ஃபவுசியா அப்துல் ஹமீட் (40), என்பவர் கடைசியாக, தாமான் ஆலம் புடிமான், ஷா ஆலம், சிலாங்கூர் என்ற முகவரியை கொண்டிருந்தார் என ஜெம்போல் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஹூ சாங் ஹூக் கூறினார்.
“அந்தப் பெண்ணைப் பற்றித் தகவல் தெரிந்தவர்கள் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் புலனாய்வு அதிகாரி, ஜெம்போல் மாவட்டத் தலைமையகச் சார்ஜென்ட் நோர்ஹிஷாம் சுல்கிப்லியை 017-6219957 அல்லது 06-458222 (102) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த மோசடியில் சம்மந்தப் பட்ட குடும்பம் RM13,000 க்கு மேல் இழந்ததாக ஊடகங்கள் முன்பு தெரிவித்தன.
மோசடி செய்ததற்காகக் குற்றவியல் சட்டப் பிரிவு 420 இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று ஹூ கூறினார்.




