NATIONAL

பகாங், ஜொகூரில் வெள்ள பாதிப்பு இன்று மதியம் குறைந்தது- கிளந்தானில் மாற்றமில்லை

2 ஜனவரி 2024, 7:40 AM
பகாங், ஜொகூரில் வெள்ள பாதிப்பு இன்று மதியம் குறைந்தது- கிளந்தானில் மாற்றமில்லை

கோலாலம்பூர், ஜன 2- இன்று நண்பகல் 12.00 மணி நிலவரப்படி

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மூன்று மாநிலங்களில் உள்ள தற்காலிக துயர்

துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 71ஆக

குறைந்துள்ளது.

அந்த மாநிலங்களில் உள்ள நான்கு நிவாரண மையங்களில் இன்று காலை

80 பேர் தங்கியிருந்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின்

(நம்மா) தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட வெள்ளம்

தொடர்பான சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகாங் மாநிலத்தின் மாரான் மற்றும் தெமர்லோவில் உள்ள இரு துயர்

துடைப்பு மையங்களில் இன்று காலை 29 பேர் தங்கியிருந்த நிலையில்

மதியம் அந்த எண்ணிக்கை 22 பேராக குறைந்தது.

ஜொகூர் மாநிலத்தின் சிகாமாட்டில் தற்போது 23 பேர் தற்காலிக நிவாரண

மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர். இன்று காலை 25 பேர் அங்கு

தங்கியிருந்தனர்.

கிளந்தான் மாநிலத்தின் பாசீர் மாஸ் மாவட்டத்தில் செயல்பட்டு வரும்

ஒரு துயர் துடைப்பு மையத்தில் 26 பேர் இன்னும் தங்கியுள்ளனர்.

இதனிடையே, இன்று நண்பகல் 12.00 மணி நிலவரப்படி ஆராவ் நகரிலுள்ள

சுங்கை ஆராவ் நீர் மட்டம் 24.3 மீட்டர் அதாவது ஆபத்தான கட்டத்தில்

தொடர்ந்து இருந்து வருகிறது.

பாலம் உடைந்தது அல்லது பழுதானது, நிலச்சரிவு மற்றும் வெள்ளம்

காரணமாக 24 சாலைகள் இன்னும் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.