NATIONAL

நில வரி மற்றும் வீட்டு வரி பில்கள் தபால் மூலம் அனுப்பப்படாது

2 ஜனவரி 2024, 7:23 AM
நில வரி மற்றும் வீட்டு வரி பில்கள் தபால் மூலம் அனுப்பப்படாது

ஷா ஆலம், ஜன 2: இந்த ஆண்டு முதல், சிலாங்கூரில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு நில வரி மற்றும் வீட்டு வரி பில்கள் தபால் மூலம் அனுப்பப்படாது என்று மாநில நில நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மேலும், உரிமையாளர்கள் இணையம் மூலம் பில் பெற சமூக ஊடகங்களில் இணைக்கப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும் என்று சிலாங்கூர் நிலம் மற்றும் சுரங்க அலுவலகம் (PTG)  தெரிவித்துள்ளது.

"பயனர்கள் தங்கள் கணக்கு எண், ஐடி அல்லது உரிமை விவரங்களை உள்ளிட்டு பதிவு செய்யலாம். ஏதேனும் கேள்விகள் இருந்தால், hasilptg@selangor.gov.my ஐ தொடர்பு கொள்ளவும்" என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், ehasil.selangor.gov.my நாடுவதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் மே 31க்கு முன் தொடர்புடைய வரிகளை செலுத்துமாறு பயனர்களுக்கு நிறுவனம் நினைவூட்டியது.

தேசிய நிலக் குறியீடு 1965 இன் பிரிவு 100 மற்றும் நில உரிமைச் சட்டம் 1985 இன் பிரிவு 23 ஆகியவற்றின் கீழ் வரி பாக்கி உள்ள நிலம் அல்லது மனைகள் பறிமுதல் செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.