கோலாலம்பூர், ஜன 2 - நேற்று நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இஷிகாவா பகுதியில் உள்ள ஜப்பான் மக்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஜப்பானில் உள்ள மலேசிய தூதரகம் மூலம் அரசாங்கம் சமீபத்திய முன்னேற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக பிரதமர் முகநூலில் தெரிவித்தார்.
"இந்த கடினமான மற்றும் சவாலான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அங்குள்ள மலேசியர்களுக்கு வலிமையும் பொறுமையும் கிட்ட பிராத்திப்போம்.."
7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மேற்கு ஜப்பானின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கைகள் விடப்பட்டது, சிறிய சுனாமி அலைகள் ஏற்பட்டன.
அதில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்கள் விழிப்புடன் இருக்கவும், உள்ளூர் அதிகாரிகள் வழங்கப்படும் சமீபத்திய அறிவிப்புகள் மற்றும் ஆலோசனைகளை பின்பற்றவும் விஸ்மா புத்ரா அறிவுறுத்தியுள்ளது.
தூதரக உதவி தேவைப்படும் மலேசியர்கள் தோக்கியோவில் உள்ள மலேசிய தூதரகத்தை +81-3-3476-3840 அல்லது +8180-3913-3840 (அவசர நிலை) மற்றும் mwtokyo@kln.gov.my அல்லது consular.tyo@kln.gov.my என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
- பெர்னாமா




