ஈப்போ, ஜன 1- பழத் தோட்டம் ஒன்றிலுள்ள குடிசையில் ஏற்பட்ட தீவிபத்தில் மூதாட்டியும் அவரின் மாற்றுத் திறனாளி மகளும் கருகி மாண்டனர். இந்த துயரச் சம்பவம் கிரீக், ஜாலான் ஆயர் கண்டா, கம்போங் ஆயர் தாரேங்கில் இன்று காலை நிகழ்ந்தது.
இந்த தீவிபத்து தொடர்பில் இன்று காலை 7.38 மணியளவில் கிரீக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் புகாரைப் பெற்றதாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் சயானி சாடோன் கூறினார்.
சம்பவ இடத்தை அடைந்த போது அந்த குடிசை 95 விழுக்காடு தீயில் அழிந்துவிட்டதை தீயணைப்பு வீரர்கள் கண்டனர். தீயணைப்பு வீரர்கள் அங்கு செல்வதற்கு முன்னரே தீ அணைக்கப்பட்டு விட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தில் அந்த வீட்டிலிருந்த 76 வயது மூதாட்டியும் அவரின் பார்வையற்ற 46 வயது மகளும் கருகி மாண்டது அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தெரிய வந்தது என்று இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
அவ்விருவரின் உடல்களும் இன்று காலை 9.00 மணியளவில் மீட்கப்பட்டு மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.








