ECONOMY

நம்பிக்கை, புதிய மாற்றத்துடன் புத்தாண்டைக் கொண்டாடுவோம்- குணராஜ் வாழ்த்து

1 ஜனவரி 2024, 5:37 AM
நம்பிக்கை, புதிய மாற்றத்துடன் புத்தாண்டைக் கொண்டாடுவோம்- குணராஜ் வாழ்த்து

ஷா ஆலம், ஜன 1- நமது வாழ்விலும் நம்மைச் சுற்றியுள்ள சமூகத்திலும் நேர்மறையான மாற்றங்களைச் செய்வதற்குரிய நல்வாய்ப்பாக இந்த இந்த புத்தாண்டை பயன்படுத்திக் கொள்வோம் என்று செந்தோசோ சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தியுள்ளார்.

இந்த புத்தாண்டை நம்பிக்கை மற்றும் புதிய மாற்றத்துடன் மகிழ்வுடன் கொண்டாடுவோம் என்று அவர் கூறினார்.

கடந்த காலங்களில் எல்லா நிலைகளிலும் தம்மோடு இணைந்து பணியாற்றிய தொகுதி சேவை மையத்தின் ஊழியர்கள், தொண்டூழியர்கள் மற்றும் நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.

எனது  மக்கள் சேவை புத்தாண்டிலும் தொடரும். நாம் அனைவரும் ஒன்றுபட்டு புதிய சமூகத்தை கட்டியெழுப்புவோம். மக்களுக்கு குறிப்பாக செந்தோசா தொகுதி வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள் என்று  கோத்தா ராஜா தொகுதி பி.கே.ஆர். தொகுதி தலைவருமான அவர் தெரிவித்தார்.

 

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.