ECONOMY

மூன்றாவது வெள்ள அலையிலிருந்து திரங்கானு முழுமையாக மீண்டது

1 ஜனவரி 2024, 3:21 AM
மூன்றாவது வெள்ள அலையிலிருந்து திரங்கானு முழுமையாக மீண்டது

கோல திரங்கானு, ஜன 1-  கடந்ந டிசம்பர் 23 ஆம் தேதி முதல் மாநிலத்தைத் தாக்கிய மூன்றாவது  வெள்ள அலையிலிருந்து   திரங்கானு முழுமையாக மீண்டுள்ளது.

கோல நெருஸ் மாவட்டத்தின்  தாமான் பெருமாஹான் வகாஃப் தெங்கா சமூக மண்டபத்தில் செயல்பட்டு வந்த   மாநிலத்தின் கடைசி தற்காலிக நிவாரண மையம் நேற்று பிற்பகல் 2.00 மணிக்கு மூடப்பட்டதாக திரங்கானு மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் கூறியது.

அந்ந நிவாரண மையத்தில் தங்கியிருந்த ஆறு பேரும் வீடு திரும்ப அனுதிக்கப்பட்டதைத்  தொடர்ந்து  அந்த யையம் மூடப்படாடதாக அது தெரிவித்தது.

முன்னதாக, டிசம்பர் 24 ஆம் தேதி அதிகாலை 2 மணி முதல் டிசம்பர் 26 ஆம் தேதி அதிகாலை 2 மணி வரை திரங்கானுவில் உள்ள ஆறுகளுக்கு அருகிலுள்ள பல தாழ்வான பகுதிகளில் படிப்படியாக வெள்ளம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக   நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

எனினும், கடந்த டிசம்பர் 23ஆம் தேதி  பெய்த கனமழையால்  21 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள்  டுங்குனில் உள்ள புசாட் தேசியப் பள்ளியில் அன்றைய தினம் இரவு 9.30 மணியளவில் தங்க வைக்கப்பட்டனர்.

அன்றைய தினம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மாவட்டமாக மாராங் ஆனது. வகாஃப் இரவு 10 மணிக்கு திறக்கப்பட்ட டேவான் சிவிக் வகாஃப் தாபாயில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் அடைக்ககலம்  நாடினர்.

தொடர்ச்சியான கனமழை  காரணமாக திரங்கானுவிலுள்ள மாவட்டங்கள்  ஒன்றன் பின் ஒன்றாக வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ளத் தொடங்கின.

வெள்ளம் காரணமாக கடந்த டிசம்பர் 26ஆம் தேதி மிக அதிகமாக அதாவது 2,313 குடும்பங்களைச் சேர்ந்த  10,6643 பேர் மாநிலத்திலுள்ள 134 துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்தனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.